கிருஷ்ணகிரியில் ஆதிதிராவிட மக்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்தவர்களை கண்டித்து விசிக ஆர்ப்பாட்டம்

 
thiruma

ஒருங்கிணைந்த மாவட்ட விசிக  சார்பில் 09-11-2023 அன்று கிருஷ்ணகிரியில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.

thiruma

கிருஷ்ணகிரி மாவட்டம் சோக்காடி கிராமத்தில் சுமார் 90க்கும் மேற்பட்ட பட்டியலின குடும்பத்தினரும், 200க்கும் மேற்பட்ட மற்ற சமூக குடும்பத்தினரும் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் தோக்கடி கிராமத்தில் ஊர் பொதுவாக மாரியம்மன் கோவில் புனரமைக்கும் பணியானது நடைபெற்று வருகிறது. அதற்காக கோவிலின் அருகே உள்ள கிரானைட் கற்களை பாலிஷ் செய்யும் பணியானது கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இதில் கிரானைட் கற்கள் பாலிஷ் செய்யும் பொழுது அருகில் உள்ள வீடுகளில் தூசி பரவுவதால் வீடுகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பணிகள் மேற்கொள்ளுமாறு பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த சிலர் தெரிவித்துள்ளனர்.

இதனால் இரு பிரிவினர் இடையே மோதல் நிலவே நிலையில் சோக்காடி பகுதியைச் சேர்ந்த அதிமுகவின் ஒன்றிய செயலாளர் ராஜன் சமாதான பேச்சுவார்த்தை நடத்த வந்ததாக கூறப்படுகிறது அந்த சமயம் சோக்காடி ராஜனுக்கும் பட்டியல் இன சமூக மக்களுக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது அதில் சோக்காடி ராஜனை தாக்கியதாகவும் தெரிவிக்கின்றனர். இதனால் இரு பிரிவினர் இடையே மோதல் அதிகரித்த நிலையில்  ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டு பட்டியல் இனத்த மக்களின் டுகள் மீது கற்களை வீசி தாக்கியும் அங்கிருந்த ஓலைகளுக்கு தீ வைக்கும் தகராறில் ஈடுபட்டனர். இதனால் சோக்காடி பகுதியே பெரும் பதற்றத்துடன் காணப்பட்டது. இச்சம்பவத்தையடுத்து இருதரப்பை சார்ந்த 23 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்களில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சார்ந்த 7 பேரும், பட்டியல் இன சமூகத்தை சேர்ந்த தரப்பிலிருந்து 6 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Thiruma

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள விசிக தலைவர் திருமாவளவன், “கிருஷ்ணகிரி அருகே சோக்காடி கிராமத்தில் ஆதிதிராவிடர்களைத் தாக்கிச் சொத்துகளைச் சேதப்படுத்திய சாதிவெறியர்களை மட்டுமின்றி பாதிக்கப்பட்டுள்ள ஆதிதிராவிட மக்கள் மீதும் பொய்வழக்குப் பதிவு செய்து அவர்களைக் கைது செய்துள்ள  நடவடிக்கையைக் கண்டித்து ஒருங்கிணைந்த மாவட்ட விசிக  சார்பில் 09-11-2023 அன்று கிருஷ்ணகிரியில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். கட்சியின் நன்மதிப்பைக் கெடுக்கும் வகையில் தொடர்ந்து செயல்பட்டுவரும் ஆசிரியர் கூட்டமைப்பைச் சார்ந்த ஆசிரியர் தமிழ்மணி அவர்கள்  மூன்று மாத காலத்திற்கு கட்சியிலிருந்தும் கூட்டமைப்பிலிருந்தும்  இடைநீக்கம் செய்யப்படுகிறார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.