”மு.க.ஸ்டாலின்தான் கூட்டணியை விட்டு வெளியேற சொன்னார்"- திருமாவளவன்

 
“சினிமா ஹீரோ போல திடீரெனத் தோன்றி சாதிய வன்கொடுமையை ஒழித்துவிட முடியாது”- திருமாவளவன்

காங்கிரஸ் கட்சியுடன் தவெக கூட்டணி வைத்து மதச்சார்பின்மையை உறுதிப்படுத்தியுள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணியின் பரப்புரைக் கூட்டத்தில் பேசிய திருமாவளவன், “2011, 2014 ល់ இருந்தேன். 2016 தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேறுவதற்கு நாங்கள் காரணம் இல்லை. அன்றைக்கு ரவிக்குமாரை அழைத்து, 'நாங்கள் 180 முதல் 200 இடங்களில் தனித்து போட்டியிட இருக்கிறோம். நீங்கள் இந்தக் கூட்டணியில் தொடர வேண்டாம். எனவே நீங்கள் வேறு கூட்டணிக்கோ, வேறு வழிக்கோ போகலாம்' என மு.க.ஸ்டாலின் அழைத்துச் சொன்னார். அதன் காரணமாகவே நாங்கள் வெளியேறினோம்.

2009-ஆம் ஆண்டு நான் முதன்முறையாக நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போது, சோனியா காந்தி அம்மையார் என்னை வனத்துறை அமைச்சராக நியமிக்க முடிவு செய்துள்ளதாக எனக்குத் தகவல் கிடைத்தது. இந்த விவரத்தை எங்களிடம் பகிர்ந்தவர் ஜெயராம் ரமேஷ். ஆனால், இறுதி நேரத்தில் என்னால் அமைச்சராக முடியவில்லை. அதற்கான உண்மையான காரணம் என்னவென்று தெரியாமல் எதையும் கூறக் கூடாது என்பதால், பொதுவெளியில் இதை நான் இதுவரை குறிப்பிட்டதில்லை. ஆனால், அது தடுக்கப்பட்டது என்றே காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது” என்றார்.