“சட்டமன்றத்தில் விசில் அடிக்க முடியாது, தியேட்டரில் தான் விசில் அடிக்க முடியும்”- திருமாவளவன்

 
திருமா

சட்டமன்றத்தில் விசில் அடிக்க முடியாது, தியேட்டரில் தான் விசில் அடிக்க முடியும். அவர்களை தியேட்டருக்கு அனுப்புங்க என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.

Thirumavalavan Campaigns for DMK's I.P. Senthilkumar


கள்ளக்குறிச்சி மாவட்டம் நீலமங்கலம் கிராமத்தில் கள்ளக்குறிச்சி தனி சட்டமன்ற தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மாலதியை ஆதரித்து விசிக தலைவர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய விசிக தலைவர் தொல்.திருமாவளவன், “சட்டமன்றத்தில் விசில் அடிக்க முடியாது, தியேட்டரில் தான் விசில் அடிக்க முடியும். அவர்களை தியேட்டருக்கே அனுப்புங்க. திமுக கூட்டணி பொருத்தமான கூட்டணி கொள்கை கூட்டணி, அதிமுக கூட்டணி பொருந்தாத கூட்டணி. இரட்டை இலைக்கு ஓட்டு போட்டால் பாஜகவிற்கு போட்டதாக தான் பொருள். இரட்டை இலைக்கு ஓட்டு போட்டால் மோடிக்கு போட்டதாக தான் அர்த்தம். பாஜகவை தமிழகத்தில் காலூன்ற வைக்க அதிமுக தொண்டர்களை வைத்து பாஜக சின்னங்களை வரைய செய்து வருகிறது. மேலும் எடப்பாடி பழனிச்சாமி பாஜகவை தோளில் சுமந்து கொண்டிருக்கின்றார்.

பாஜகவுடன் கூட்டணி வைத்ததன் மூலமாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு எடப்பாடி பழனிச்சாமி துரோகம் செய்து விட்டார். இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான ஒரே கட்சி இந்திய அரசியலில் பாஜக தான். டயர் நக்கி எடப்பாடி பழனிச்சாமியுடன் கூட்டணி வைப்பது தற்கொலைக்கும் சமம்.திமுக கூட்டணி பொருந்தும் கூட்டணி என்பதற்கும்,அதிமுக கூட்டணி பொருந்தாத கூட்டணி. திமுக தலைவர் ஸ்டாலின் கரத்தை வலுப்படுத்த நமது வெற்றி வேட்பாளர் மாலதிக்கு பானை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள்” என கேட்டுக்கொண்டார்.