“இந்தியாவே திரும்பிப் பார்க்கும் அளவிற்கு ஒரு மிகப்பெரிய மெகா கூட்டணி”- ஸ்டாலின் முன் கர்ஜித்த திருமா
சென்னை அண்ணா அறிவாலயத்திலுள்ள கலைஞர் அரங்கில் கூட்டணி கட்சித் தலைவர்களுடனான ஆலோசனை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “2026 சட்டமன்ற தேர்தலில் நாம் மாபெரும் கூட்டணியை அமைத்துள்ளோம். இந்த கூட்டணி புதிதாக அமைந்த கூட்டணி கிடையாது.இதற்கு முன் நடந்த சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களை நாம் இக்கூட்டணியுடன் சந்தித்து வெற்றி பெற்றுள்ளோம்” என்றார். காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பேசுகையில், “200 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெறுவது உறுதி.மீண்டும் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்பது உறுதி” என்றார். தொடர்ந்து பேசிய சி.பி.எம். மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், “வெற்றி... வெற்றி, என்ற குறிக்கோளுடன் நமது பணிகள் இன்றிலிருந்து தொடங்குகின்றன. ஸ்டாலின் மீண்டும் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்பார்” என்றார்.
சென்னை அண்ணா அறிவாலயத்திலுள்ள கலைஞர் அரங்கில், கூட்டணிக் கட்சித் தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய சி.பி.ஐ மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், “மதச்சார்பின்மையை குறிவைக்கும் பாஜகவை ‘தமிழ்நாடு வெல்லும்’ என்ற முழக்கம் வீழ்த்தும். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நமது கூட்டணி வெல்லும். இந்தியாவிற்கே நாம் புதிய திசையை காட்டுவோம்”என்றார். கமல்ஹாசன் பேசுகையில், “மே மாதம் ஒரு விழா நடக்கபோகிறது. அப்போது நாம் எல்லோரும், எப்போதும் அழைப்பதுபோல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் என அழைக்கப்போகிறோம். நமது கூட்டணியை மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி என்று அழைக்கிறோம். முற்போக்கு தவிர வேறு வழியில்லை. பிற்போக்கு என்பது ஒரு Choice ஆக இருக்கவே முடியாது” என்றார். இதேபோல் திருமாவளவன், “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அரசியல் உத்தியால், இன்றைக்கு இந்தியாவே திரும்பிப் பார்க்கும் அளவிற்கு ஒரு மிகப்பெரிய மெகா கூட்டணி உருவாகியிருக்கிறது. நமது எதிரிகள் இன்று சிதறிக்கிடக்கிறார்கள். அவர்கள் எளிதாக வெற்றி பெற முடியாது. அவர்களுக்கு ஊடகங்களின் Hype மட்டுமே இருக்கிறது” எனக் கூறினார்.
அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் கூட்டணி கட்சித் தலைவர்களை சந்தித்து உரையாடிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்#MKStalin #DMKAlliance #Election2026 #ElectionwithTTN pic.twitter.com/qk6pSHyuE3
— Top Tamil News (@toptamilnews) March 30, 2026
சென்னை அண்ணா அறிவாலயத்திலுள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்ற கூட்டணிக் கட்சித் தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய இந்தியாவிற்கே திராவிட மாடல் ஆட்சி வழிகாட்டியதுபோல், திராவிட மாடல் 2.0 ஆட்சியிலும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நிச்சயம் IUML கட்சியின் தேசியத் தலைவர் காதர் மொகிதீன், “இந்தியாவிற்கே திராவிட மாடல் ஆட்சி வழிகாட்டியதுபோல், திராவிட மாடல் 2.0 ஆட்சியிலும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நிச்சயம் வழிகாட்டுவார். இந்தக் கூட்டணி வெல்லும்; அதை வரலாறு சொல்லும்.” என்றார்.

