சிறுபான்மையினர் வாக்கை பிரிப்பதற்காக பாஜகவால் களம் இறக்கப்பட்டவர் விஜய்- திருமாவளவன்

 
திருமா

திமுகவிற்கு செல்லும் சிறுபான்மையினர் வாக்கை பிரிப்பதற்காக பாஜகவால் களம் இறக்கப்பட்டவர் நடிகர் விஜய் என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அடுத்த ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியத்திற்கு உட்பட்ட நாச்சியார்பேட்டை, பாளையங்கோட்டை, சோழத்தரம் உள்ளிட்ட கிராம பகுதிகளில், விசிக தலைவர் திருமாவளவன், காட்டுமன்னார்கோவில் விசிக வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சியில் ஈடுபட்டார். பாளையங்கோட்டை பகுதியில் திறந்த வாகனத்தில் இருந்தபடி பேசிய அவர், தவெக தலைவர் விஜய் குறித்து பேசும்போது, விஜய் திமுக தலைவர் ஸ்டாலினை முதலமைச்சர் பதவியிலிருந்து இறக்குவதையே ஒரு கொள்கையாக பேசிக்கொண்டிருக்கிறார். திமுகவிற்கு செல்லும் கிறித்தவ, இஸ்லாமிய ஓட்டுகளை பிரிப்பதற்காகவே பாஜகவால் இறக்கிவிடப்பட்டவர். அதனை சிறுபான்மை சமூகத்தினர் புரிந்துகொள்ள வேண்டும் ஊருக்கு ஐந்து ஓட்டுகளை களைந்தாலும் அது விரையம்தான் என்றார்.

இதனையடுத்து அஇஅதிமுகவை விமர்சித்து பேசிய அவர், மறைந்த எம்ஜிஆர் கண்டறிந்த, இரட்டை இலை இது இல்லை, ஜெயலலிதா அவர்களை வெற்றிபெற செய்த இரட்டை இலை சின்னம் இது இல்லை, இது பாஜகவின் சின்னமாக தற்போது மாறிப்போய் பலகாலம் ஆகிவிட்டது. எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் ஆனால் அது பாஜக தலைமையிலான தமிழ்நாட்டை உருவாக்கும் இது சிறுபான்மை, பட்டியளின, பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு எதிராக அமையும் சமூக நிதி கட்டமைப்புகளை சிதைக்கும், சாதிச் சண்டை, மதச்சண்டை ஆகியவைகள் பெருகாரணமாக அமையும். அதேபோல எங்களை எதிர்த்து போட்டியிடும் மாம்பழம் தற்போது அன்புமணி கையில் உள்ளது. தந்தைக்கே துரோகம் செய்தவர் அன்புமணி, மருத்துவம் படிக்க வைத்து, நாடாளுமன்ற உறுப்பினராக்கி அழகு பார்த்தவர் டாக்டர். ராமதாஸ் அவர்கள் தந்தையை விடுத்து மற்றதை எப்படி ஒருவரால் சிந்திக்க முடியும் தற்போது பாஜக கூட்டணியுடன் வருகிறார் என்றார்.