``எனக்கு வந்த அந்த போன் கால்...ஸ்டாலினை தோற்கடிக்க சதி’’- திருமாவளவன் பரபரப்பு

 
``எனக்கு வந்த அந்த போன் கால்...ஸ்டாலினை தோற்கடிக்க சதி’’- திருமாவளவன் பரபரப்பு

SIR மூலம் தான் ஸ்டாலின் தோற்றார். SIR மூலம் அண்ணன் ஸ்டாலின் அவர்கள் குறிவைக்கப்பட்டார் என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

சென்னையில் நடைபெற்ற SIR-க்கு எதிரான இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டத்தில் பேசிய திருமாவளவன், “கொளத்தூரில் 1 லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டது. தேர்தலுக்கு முன்பே யாரோ ஒரு பெண்மணி போன் செய்து, கொளத்தூரில் சதி நடக்கிறது. முதல்வர் வெல்வது கடினம் என என்னிடம் சொன்னார். முதலில் அலட்சியம் செய்தேன். அப்பெண் மீண்டும் மீண்டும் சொன்னதும் நான் அண்ணன் ஸ்டாலினிடமே சென்று இப்படி சொல்கிறார்கள், தொகுதி மாறி நில்லுங்கள் என்றேன். ஆனால் அவர் பெரிதாக எடுத்துகொள்ளவில்லை. அவரோ அனைத்தையும் சரியாக வெரிபிக்கேஷன் செய்துவிட்டோம். அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை என்று கூறிவிட்டார். தேர்தலுக்கு முன்பே இந்த எச்சரிக்கை நம் கவனத்துக்கு வந்தது என்பதை சுட்டிக்காட்டவே இதை சொல்கிறேன். SIR மூலம் தான் ஸ்டாலின் தோற்றார். SIR மூலம் அண்ணன் ஸ்டாலின் அவர்கள் குறிவைக்கப்பட்டார். 

ராகுல் காந்தியை ஒரு காங்கிரஸ்காரராக மட்டும் பார்ப்பதைவிட, இந்திய தேசத்தைப் பாதுகாப்பதற்கான ஒற்றை நம்பிக்கையாக பார்க்கிறோம். பாஜக தன்னுடைய அரசியல் எதிரிகளை சொல்லிவைத்தது போல் காலி செய்து வருகிறது. அரவிந்த் கெஜ்ரிவால், மம்தா பானர்ஜி, மு.க.ஸ்டாலின் மற்றும் பினராயி விஜயன் ஆகியோர் SIR-ஆல் தோற்கடிக்கப்பட்டு இருக்கிறார்கள். இவர்கள் தன்னியல்பாக தோற்றவர்கள் இல்லை. குறிவைத்து தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்கள்” என்றார்.


-