"கள்ளக்குறிச்சி ஆட்சியர் நடந்ததை துணிந்து சொல்லவேண்டியது அவசியம்"- திருமாவளவன்

 
thirumavalavan

தவெக எம். எல். ஏ. ஆபாச குறுஞ்செய்தி சமூக ஊடகங்களில் வந்த தகவலை வைத்து தான் இந்த விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.. கள்ளக்குறிச்சி ஆட்சியர் நடந்ததை துணிந்து சொல்லவேண்டியது அவசியம் விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய  விசிக தலைவர் திருமாவளவன், "திருப்பரங்குன்றத்தில் வழக்கமாக ஏற்றப்படும் தீப மண்டபத்திலேயே இந்த முறையும் தீபம் ஏற்றப்படும் என்று நம்புகிறேன்.. தமிழ்நாடு அரசு அதன் நிலைப்பாட்டை தெளிவுபடுத்திவிட்டது. தமிழ்நாடு அரசு எடுத்திருக்கும் நிலைப்பாட்டுக்கு மாறாக உயர்நீதிமன்ற தீர்ப்பை உச்சநீதிமன்ற இடைக்கால தீர்ப்பு அமைந்திருக்கிறது. இந்து மக்களுக்கு எதிராக தமிழ்நாடு அரசும் இல்லை. கூட்டமைப்புகளும் இல்லை. மத அடிப்படையில் பிரச்சினையைத் தூண்டி நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க முயற்சிப்பதைத் தடுக்கவே தமிழ்நாடு அரசு போராடிக் கொண்டிருக்கிறது. சட்டரீதியாக இஸ்லாமிய கூட்டமைப்புகளைச் சார்ந்த நாங்களும் போராடிக் கொண்டிருக்கிறோம். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ததன்மூலம் தமிழ்நாடு அரசு தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருக்கிறது. இந்த நிலைப்பாட்டில் அரசு உறுதியாக இருக்கும்.  வழக்கமாக.. பாரம்பரியமாக எங்கே தீபம் ஏற்றப்பட்டதோ அங்கேயே தீபம் ஏற்றுவதற்கான நடவடிக்கையை அறநிலையத்துறையினர் மேற்கொள்வார்கள் என்று நம்புகிறேன். 

தவெக எம். எல். ஏ. ஆபாச குறுஞ்செய்திசமூக ஊடகங்களில் வந்த தகவலை வைத்து தான் இந்த விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.. கள்ளக்குறிச்சி ஆட்சியர் நடந்ததை துணிந்து சொல்லவேண்டியது. திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள பிள்ளையார் கோயிலின் முன்பு, ஆண்டுதோறும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வருவதை யாரும் எதிர்க்கவில்லை. இந்த ஆண்டும் வழக்கம்போல அதே இடத்தில் தீபம் ஏற்றப்படும். ஆனால், வம்பிழுப்பவர்கள் வழக்குத் தொடுத்திருப்பது அருகிலுள்ள தர்காவுக்குச் செல்லும் வழியில் நிற்கும் ஒரு கல்தூணில் தீபம் ஏற்றுவோம் என்றுதான்" என்றார்.