“தவெகவில் பாமக.. இது திட்டமிட்ட வதந்தி”- திருமாவளவன்

 
திருமாவளவன்

தவெக கூட்டணியில் பாமக இடம்பெறப் போகிறது என்கிற செய்தியை திட்டமிட்டு வதந்தி பரப்புகிறார்கள் என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

ஃபேஸ்புக் நேரலையில் திடீரென தோன்றி விளக்கமளித்த திருமாவளவன், “தவெக கூட்டணியில் பாமக இடம்பெறப் போகிறது என்கிற செய்தியை திட்டமிட்டு வதந்தி பரப்புகிறார்கள். இப்படி செய்தால் விசிகவினர் பின் வாங்குவார்கள். பாஜகவும், பாமகவும் இருக்கும் அணியில் விசிக இருக்காது என்பதை 15 ஆண்டுகளாக சொல்லி, அதில் உறுதியாக இருக்கிறோம். தவெக கூட்டணியில் பாமக இடம் பெறும் என்ற செய்தியை பரப்பினால், களத்தில் விசிகவினர் தவெக வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்க மாட்டார்கள், விசிகவின் ஆதரவு முழுமையாக சேராது என நினைக்கிறார்கள். இதனால் பாமக - தவெக கூட்டணி குறித்து திட்டமிட்டு வதந்தி பரப்பப்படுகிறது” என்றார்.