தவெகவை ஏன் லேசாக நினைத்தீர்கள்?- திருமாவளவன்

 
திருமாவளவன்

தவெகவின் அரசியல் அணுகுமுறையை திமுக கணிக்க தவறிவிட்டதாக விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

தருமபுரியில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய திருமாவளவன், “திமுக கூட்டணியில் இருந்து விடுதலை சிறுத்தைகள் வெளியேறுவதற்கு திமுக தான் முழு முதல் காரணம். எங்களை கூட்டணியில் தக்கவைக்கும் முயற்சியை திமுக எடுக்கவில்லை என்பதே உண்மை. திமுக எங்களை கைவிட்டுவிட்டது. நாங்கள் கூட்டணியில் இருந்து வெளியேறவில்லை. மதிமுகவை தனிச்சின்னத்தில் நிற்க வைத்தீர்களே, அது அவர்களுக்கு வருத்தம் ஏற்படுத்தியிருக்கும்தானே! இத்தனை ஆண்டுகளாக கூட்டணியில் இருந்த ஐயூஎம்எல் ஏன் திமுகவை விட்டு வெளியே வந்தது? கூட்டணிக் கட்சிகளை திமுக கையாண்ட விதத்தில்தான் தவறு என எந்த நியாயஸ்தனும் பேசவில்லை.


தவெகவின் அரசியல் அணுகுமுறையை திமுக கணிக்க தவறிவிட்டது. தவெகவை எதிர்த்து திமுக எதிர் அரசியல் செய்திருக்க வேண்டுமா? வேண்டாமா? கரூர் சம்பவத்தில் விஜய் மீது வழக்கு தொடர சொன்னனே.. ஏன் அதை செய்யவில்லை? எதற்காக மெத்தனமாக இருந்தீர்கள்? திமுகவை குறி வைத்து விஜய் பேசியபோது, அன்று நீங்கள் அவரை எதிர்த்து எதிர் அரசியல் ஏன் செய்யவில்லை? தவெகவை ஏன் லேசாக நினைத்தீர்கள்?” எனக் கேள்வி எழுப்பினார்.