இடைத்தேர்தலில் போட்டியிட மாட்டேன்- திருமாவளவன் விளக்கம்

 
திருமாவளவன்

அதிமுக எம்.எல்.ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்வது ஜனநாயகத்திற்கு உகந்தது அல்ல என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து ராஜினாமா செய்வது தமிழ்நாடு அரசியலுக்கு ஆரோக்கியமானது அல்ல. எந்த பின்னணியில் இதனை செய்கிறார்கள் என்பது தெரியாது. அதிமுகவின் உட்கட்சி விவகாரமாக இதனை கடந்து செல்ல முடியவில்லை. திடீர் திடீரென பதவி விலகும் சூழல் ஜனநாயகத்திற்கு உகந்தது அல்ல. திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட விசிக வாய்ப்பு கேட்டதாக வெளியான தகவல் உண்மையில்லை. இடைத்தேர்தலில் போட்டியிட மாட்டேன்” என்றார்.