#BREAKING அமைச்சராகிறார் வன்னிஅரசு- திருமாவளவன் அறிவிப்பு

 
s

முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அமைச்சரவையில் விசிக பங்கேற்பதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.

சென்னை வேளச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அமைச்சரவையில் விசிக இடம்பெறுகிறது. திண்டிவனம் எம்.எல்.ஏ. வன்னி அரசை அமைச்சராக பரிந்துரைக்கிறோம். தமிழக அரசியல் வரலாற்றில் கூட்டணி ஆட்சிமுறை என்பது அறிமுகமாகிறது. ஆட்சியில் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்ற முழக்கத்தை தமிழ்நாட்டில் முதலில் எழுப்பியது விசிக. அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்பது நிர்வாகிகள் பெரும்பாலானோர் கருத்து. கட்சியின் முன்னணி பொறுப்பாளர்கள், அமைச்சரவையில் இடம்பெற வேண்டுமென்ற கருத்தை வலியுறுத்தி வந்தார்கள். கட்சியின் நீண்டகால கனவை நிறைவேற்றும் வகையில் அமைச்சரவையில் இடம்பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் விசிக தொடர்கிறதா என்பது குறித்து நாளை அல்லது நாளை மறுதினம் தெரிவிக்கப்படும்” என்றார்.