"அமைச்சரவையில் அதிமுகவுக்கு இடமில்லை! விசிகவுக்கு இடம் என விஜய் விருப்பத்தை கூறினார்"- திருமாவளவன்

 
ச்

அமைச்சரவையில் விசிக இடம்பெறுவது குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி முடிவெடுக்கப்படும் என விசிக தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Thol.Thirumavalavan | X

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்ற அழைப்புக்கு நன்றி. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவின் அழைப்பிற்கு நன்றி தெரிவிக்கிறேன். தவெக அழைப்புக்கு நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். விசிக அலுவலகம் வரும்போதே அமைச்சரவையில் இடம் பெற வேண்டும் என முதலமைச்சர் விஜயும் விருப்பத்தை வெளிப்படுத்தினார். தவெகவின் அழைப்பை ஏற்று எங்கள் முடிவு குறித்து மீண்டும் கலந்தாலோசிப்போம். கட்சியின் முன்னணி பொறுப்பாளர்களுடன் கலந்து பேசி முடிவை அறிவிப்போம். 

அதிமுகவிலிருந்து ஒரு பிரிவுக்கு தவெக அமைச்சரவையில் இடம் தரப்படுமேயானால் எங்களின் ஆதரவு நிலைப்பாட்டை மறு பரிசீலனை செய்வோம் என முன்பே சொல்லியிருந்தேன். தற்போது அதிமுகவின் ஒரு பிரிவு எம்.எல்.ஏ.க்களுக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்க வாய்ப்பில்லை என தவெக தரப்பு கூறியுள்ளது” என்றார்.