#BREAKING "வி.சி.க. அலுவலகத்திற்கு சோபா வந்தது ஏன்?"- திருமாவளவன் விளக்கம்

 
#BREAKING "வி.சி.க. அலுவலகத்திற்கு சோபா வந்தது ஏன்?"- திருமாவளவன் விளக்கம்

தலித் முதல்வரை ஈபிஎஸ் தடுத்தார் என சி.வி. சண்முகம் குற்றம்சாட்டியது தொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்கு விசிக தலைவர் தொல். திருமாவளவன் விளக்கம் அளித்தார்.

ச்

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “முதல்வர் பதவிக்காகவே தவெகவுக்கு ஆதரவு தெரிவிக்க நான் தாமதம் செய்ததாக பலரும் அவதூறு பரப்புகிறார்கள். முதல்வர் பதவிக்காக நான் காத்திருக்கவில்லை. முதல்வர் விஜய் சந்திப்பு முன் விசிக அலுவலகத்திற்கு வந்த சோஃபா ஏற்கனவே ஆர்டர் செய்யப்பட்டது. எங்கள் அலுவலகத்திற்கு சோஃபா வந்ததை குறிப்பிட்டு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறவில்லை. இது ்தற்செயலாக நடந்தது. விஜய்யின் வருகைக்காக சோஃபா ஆர்டர் செய்யப்படவில்லை. தவறான தகவலை பரப்ப வேண்டாம். தலித் முதல்வரை ஈபிஎஸ் தடுத்தார் என சி.வி. சண்முகம் குற்றம்சாட்டியது தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது” என்றார்.