“நாங்கள் விரும்பிய 8 தொகுதிகள் கிடைத்துள்ளன”- திருமாவளவன்
Mar 27, 2026, 19:17 IST1774619249524
நாங்கள் விரும்பிய தொகுதிகள் கிடைத்துள்ளன, சுமூகமாக பேச்சுவார்த்தை இருந்தது என விசிக தலைவர் திருமாவளவன் பேட்டியளித்துள்ளார்.
சென்னை அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “விசிக போட்டியிடும் 8 தொகுதிகள் எவை என்பது முடிவானது. விசிக போட்டியிடும் தொகுதிகளை கூட்டணியின் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார். இன்னும் ஓரிரு கட்சிகளுடன் தொகுதியை இறுதி செய்வதற்கு பேச்சுவார்த்தை நடப்பதால் அதிகாரப்பூர்வமாக நாளை அறிவிப்பார்கள். திமுக கூட்டணியில் பிரச்சனை எழாதா? என்று எதிர்பார்ப்பவர்கள் ஏமாந்து போவார்கள். எங்களுக்கு ஒதுக்கப்பட்ட பானை சின்னத்தை புதுச்சேரிக்கும் ஒதுக்க 24ம் தேதி கடிதம் அனுப்பினோம். தேர்தல் ஆணையம் பானை சின்னம் ஒதுக்காததால் புதுச்சேரியில் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுகிறோம்” என்றார்.

