“எப்படியாவது திமுகவிற்கும் விடுதலை சிறுத்தைக்கும் விரிசலை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்”- திருமாவளவன்
பாஜக இன்னும் கூட்டணியே அமைக்கவில்லை, அதிமுக பாஜகவோடு கூட்டணியில் நீடிக்குமா என்பது தெரியவில்லை என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடந்த விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகி ராஜா முஹம்மது அவர்களின் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட விடுதலைச் சிறுத்தை கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினரும் தொல் திருமாவளவன் கொண்டு மணமக்களை வாழ்த்தினார். அதன்பின் பத்திரிக்கையாளர்களை சந்தித்த திருமாவளவன், “புதிய கல்வி கொள்கையை கேரளா அரசு எதன் அடிப்படையில் ஏற்றுக்கொண்டது என தெரியவில்லை.கேரளா அரசு பல விமர்சனங்களுக்குஇடையே புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டது அதிர்ச்சி அளிக்கிறது. தமிழ்நாடு அரசு புதிய கல்விக் கொள்கையிலும் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக தான் இருக்கும்.
சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த நடவடிக்கை எதிர்த்து தமிழக முதல்வர் அனைத்து கட்சி கூட்ட வேண்டும். என்ஐஆர் கூடாது என்பதுதான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிலைப்பாடும். அதன் கூட்டணி கட்சிகளின் நிலைப்பாடும் ஆகும். அதிமுக, திமுக,கூட்டணிகள் ஓரணியில் நின்று எஸ்.ஐ .ஆர் நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும். பாஜக, சங் பரிவார் அமைப்பினர் எங்களை குறி வைத்து அரசியல் செய்கின்றனர்.எப்படியாவது திமுகவிற்கும் விடுதலை சிறுத்தைக்கும் விரிசலை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர், அவர்களின் நோக்கம் நிறைவேறாது. பாஜக இன்னும் கூட்டணியே அமைக்கவில்லை. அதிமுக பாஜகவோடு கூட்டணியில் நீடிக்குமா என்பது தெரியவில்லை. திமுக கூட்டணியை எதிர்த்து எதிர்கட்சிகள் உதிரிகளாகதான் கிடக்கிறார்கள், வலுவான கூட்டணியை அமைக்கவில்லை” என்றார்.


