எடப்பாடி பழனிசாமியை பேச வைக்கின்றனர் - திருமாவளவன்

 
திருமாவளவன் திருமாவளவன்

உடல்நலக்குறைவால் உயிரிழந்த மு.க.முத்துவின் உடலுக்கு விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி நேரில் அஞ்சலி செலுத்தினார்

'பெண்களை விரட்டிய காரில் கட்சி கொடி கட்டியதாலேயே திமுக என ஆகிவிடாது'- திருமாவளவன்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் தொல்.திருமாவளவன், “கும்மிடிப்பூண்டி அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் 10 நாட்களாகியும் குற்றவாளியைக் கண்டுபிடிக்காமல் இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. குற்றவாளியை பிடிப்பதில் காவல்துறை விரைந்து செயல்பட வேண்டும். இதற்காக சிறப்பான குழுக்கள் அமைக்க வேண்டும். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும்.

எடப்பாடி பழனிசாமியை சுற்றுப்பயணத்தில் மக்களுக்கான கோரிக்கைகளை பற்றி பேசாமல், திமுக கூட்டணி கட்சிகளை அழைப்பதை பேசிவருகின்றனர். பழனிசாமி அவராக பேசவில்லை, யாரோ பேச வைக்கின்றனர்” என்றார்.