அழுத்தம் காரணமாகவே அதிமுக- பாஜக கூட்டணி: திருமாவளவன்

 
திருமா

அதிமுக- பாஜக கூட்டணிதான் அமையும் என்பது ஏற்கனவே எல்லோரும் யூகித்த ஒன்றுதான் என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “அதிமுக- பாஜக கூட்டணிதான் அமையும் என்பது ஏற்கனவே எல்லோரும் யூகித்த ஒன்றுதான். அது இன்று நிறைவேறி இருக்கிறது. விஜய் போன்ற புதிய அரசியல் கட்சி மற்றும் மற்ற அமைப்புகளுடன் இணைந்து அதிமுக கூட்டணி அமைக்கக்கூடாது என்பதில் பாஜக, ஆர்.எஸ்.எஸ் மிக கவனமாக இருந்தது. இன்று நெருக்கடி மற்றும் அழுத்தத்தின் அடிப்படையில்தான் கூட்டணிக்கு அதிமுக சம்மதம் தெரிவித்துள்ளது. இந்துத்துவாவில் நாட்டம் கொண்டிருந்தாலும் பாஜகவை ஜெயலலிதா தள்ளி வைத்திருந்தார்.

அதிமுக- பாஜக கூட்டணியை ஒருபோதும் தமிழ்நாடு மக்கள் ஏற்கமாட்டார்கள். பாஜகவுடன் கூட்டணி அமைத்திருப்பது அதிமுகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும். அதிமுகவை மெல்ல மெல்ல பலவீனப்படுத்தி தமிழ்நாட்டில் அந்தக் கட்சியின் இடத்தை பாஜக பிடிக்கும் நிலை உருவாகலாம்” எனக் கூறினார்.