"திமுக கூட்டணியில் இருந்து நாங்கள் பிரிந்து வருவோம் என இலவு காத்த கிளி போல ஈபிஎஸ் காத்திருந்தார்"- திருமாவளவன்

திமுக கூட்டணி கட்சிகள் பிரிந்து வரும் என இலவு காத்த கிளி போல காத்துக் கொண்டிருந்தார் எடப்பாடி பழனிசாமி என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
மறைந்த குமரி அனந்தன் உடலுக்கு விசிக தலைவர் திருமாவளவன் அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “விசிகவை வாழ்த்தி ஊக்கமளித்தவர் குமரி ஆனந்தன். அவரது இறப்பு தமிழ் சமூகத்திற்கு நேர்ந்த பேரிழப்பு. காந்தி, காமராஜரின் கடைசி தொண்டர் காலமாகிவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும். திமுக கூட்டணி கட்சிகள் அடிமை சாசனம் எழுதிக் கொடுத்து கூட்டணியில் இருப்பதாக எடப்பாடி பழனிசாமி விமர்சிக்கிறார். திமுக கூட்டணி கட்சிகள் பிரிந்து வரும் என இலவு காத்த கிளி போல காத்துக் கொண்டிருந்தார் ஈபிஎஸ். திமுக கூட்டணி பலமாக இருப்பதால் விரக்தியில் பேசிக் கொண்டிருக்கிறார். அனைத்துக்கட்சி கூட்டத்தை புறக்கணிப்பதன் மூலம் மக்களிடம் இருந்து அதிமுக தன்னை விலக்கி கொள்கிறது. நீட் விலக்கிற்காக திமுக அரசு தொடர்ந்து போராடி வருகிறது. திமுக நீட் தேர்வுக்கு எதிராக வேறு என்ன செய்ய வேண்டும் என்பதை அதிமுக தெரியப்படுத்த வேண்டும்.
திமுக கூட்டணி பலமாக உள்ளதால் விரக்தியில் பேசிக் கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. ஆளுநருக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு இந்தியாவுக்கு ஒளி கொடுக்கும் மகத்தான தீர்ப்பு. உச்சநீதிமன்றத்தின் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு முதலமைச்சருக்கு கிடைத்த வெற்றி. ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு உச்ச நீதிமன்றம் சரியான பாடத்தை புகட்டி உள்ளது. "தகுதி இல்லாதவர்" எனக் கூறி, குடியரசுத் தலைவரை ஆளுநரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்” என்றார்.