'பெண்களை விரட்டிய காரில் கட்சி கொடி கட்டியதாலேயே திமுக என ஆகிவிடாது'- திருமாவளவன்

ஈரோடு கிழக்கு தேர்தலை புறக்கணிக்கும் அளவிற்கு அரசியல் ரீதியில் அதிமுக வலுவிழுந்துள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “தமிழக வெற்றி கழகத்தில் தேர்தல் வியூக பொறுப்பாளராக ஆதவ் அர்ஜினா பணியாற்ற போகின்றதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவர்களுடைய என்னுடைய வாழ்த்துக்கள். பெண்களை காரில் துரத்தியது சம்பந்தமாக காவல்துறை வழக்கு பதிவு செய்து, அவ்வாறு குற்ற செயல்களில் ஈடுபட்டவர்கள் வண்டியில் ஒரு கட்சி கொடி கட்டிருப்பதால் அந்த கட்சி பொறுப்பாக முடியாது. ஆனால் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வெற்றியோ, தோல்வியோ அதிமுக ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தலில் சந்தித்திருக்க வேண்டும். அவர்கள் தேர்தலை சந்திக்காதது அரசியல் ரீதியில் அதிமுக வலுவிழந்ததை காண்பித்து இருக்கிறது.
வக்பு வாரிய திருத்த சட்ட மசோதா - அரசியல் சட்டத்திற்கு எதிராக இருக்கிறது. எதிர்க்கட்சி உறுப்பினர்களை சரியாக நடத்தவில்லை. வேண்டுமென்றே திட்டமிட்டு அந்த கூட்டத்திலிருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளியேற்றி இருக்கிறார்கள். இந்த சட்டத்தை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என்று பாஜக நினைக்கிறது. இந்த போக்கை வன்மையாக கண்டிக்கிறோம். வகுப்பு வாரிய திறத்தச் சட்டத்தை பிரதான எதிர்க்கட்சியமான அதிமுக பேசவில்லை. தேசிய அளவில் பொதுமக்கள் விரோத நடவடிக்கைகளை ஈடுபடுவதை கண்டிக்கவில்லை. எதிர்க்கவில்லை, சுட்டிக்காட்டவில்லை என்பதை அதிர்ச்சி அளிக்கிறது அரசியல் குளத்தில் அவர்கள் எந்த அளவுக்கு வலு இழந்து வருகிறார்கள் என்பதை காட்டுகிறது என்று தெரிவித்தார்.
மத்திய அரசு பட்ஜெட்டில் எப்பொழுதுமே அவர்களுக்கு ஆளாத மாநிலங்களுக்கு ஓரவஞ்சனை செய்வது நடவடிக்கை. பட்ஜெட் தாக்கல் செய்த பிறகுதான் முழு விவரம் என்ன என்று தெரியும். பின்னர் அது குறித்து எதிர்வினை ஆற்றுவோம். விடுதலை புலிகள் பயிற்சி கொடுக்கவில்லை அவர்களது ஆயுதங்களை கையாளுவதற்கான ஆர்வத்தை நாம் காட்டினோம். இலங்கைக்கு சென்ற பொழுது அங்கையர் கன்னி என்ற படகில் நாங்கள் பயணித்தோம். அப்போது படகில் இருந்த ஆயுதங்களை கையாளுவதற்கு நாங்கள் ஆர்வம் காட்டினோம், வழக்கமாக விடுதலை புலிகள் தமிழ்நாட்டில் இருந்து வருவர்களை வரவேற்பதும் அவர்களது ஆர்வத்திற்கு மதிப்பதும் நடவடிக்கைகளில் செயல் திட்டங்களின் ஒன்றாக இருந்தது. அவர்கள் எங்கள் மீது வைத்திருக்கக்கூடிய ஒரு நம்பிக்கையின் சான்று தான் அது. அதை ஒரு செய்தியாக்கி அதில் அரசியல் செய்வதற்கு ஒன்றுமில்லை” என்றார்.