"ஈரோடு இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்பது அதிர்ச்சி"- திருமாவளவன்

 
திருமா

ஈரோடு இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்பது அதிர்ச்சியளிக்கிறது, அதிமுகவின் நிலைப்பாடு பாரதிய ஜனதாவுக்கு ஊக்குவிக்கும் விதமாக அமைந்து விடும் என 
விசிக தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

திமுக பவள விழாவில் விசிக பங்கேற்குமா? திருமாவளவன் பதில்- Thirumavalavan  says VCK Participation DMK Pavala Vizha


சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், “இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அதிமுக ஒவ்வொரு தேர்தலிலும் போட்டியிட வேண்டும். வெற்றி. தோல்வியை கருத்தில் கொள்ளாமல் ஒவ்வொரு தேர்தலையும் சந்திக்க வேண்டும். அது தமிழ்நாட்டை ஆண்ட கட்சி, இது இன்றைக்கு வலுவான எதிர்க்கட்சியாக உள்ளது. இடைத்தேர்தலில்களை தவிர்ப்பது  சரியான நிலைப்பாடு அல்ல. இந்த நிலைப்பாடு பாரதிய ஜனதாவுக்கும்  ஊக்குவிக்கும் விதமாக அமைந்து விடும். அதிமுக இப்படி ஒரு மறைமுக செயல் திட்டத்தை வைத்திருக்கிறதா என்று சந்தேகத்தை எடுப்புகிறது. இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்பது அவர்களின் பலவீனத்தை வெளிப்படுத்துகிறது. அதிமுகவின் தேர்தல் புறக்கணிப்பு மறைமுகமாக பாஜகவின் அரசியல் நிலைப்பாட்டுக்கு சாதகமாக அமையும்.

பெண்கள் பாதுகாப்பிற்காக தமிழக அரசு கொண்டு வந்த சட்டம் வரவேற்கத்தக்கது. தமிழ்நாடு அரசு நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. ஒரு முறைக்கு இருமுறை சட்ட மசோதாவை நிறைவேற்றி அனுப்பி இருக்கிறது. ஆனால் இந்திய ஒன்றிய அரசு அதை பொருட்படுத்தவில்லை. தமிழ்நாடு அரசின் செய்ய வேண்டிய வேலையை செய்திருக்கிறது. இந்திய ஒன்றிய அரசு தான் அலட்சியப்படுத்துகிறது தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை ஒன்றிய அரசு அவமதிக்கிறது. ஆக நண்பர் விஜய் போன்றவர்கள் இந்திய ஒன்றிய அரசின் தமிழக மக்களுக்கு விரோதமான நிலைப்பாட்டை எதிராக குரல் கொடுக்காமல் தமிழ்நாடு அரசை குறை சொல்வது வியப்பாக உள்ளது” என்றார்.