விசிக ஜாதிரீதியாக செயல்பட்டது இல்லை- திருமாவளவன்

 
திருமாவளவன் திருமாவளவன்

புதுச்சேரி விடுதலை சிறுத்தை கட்சியின் மாநில அமைப்பாளர் தேவ பொழிலன் சகோதரர் பூபாலன் உருவப்பட திறப்பு இன்று நடைபெற்றது. 

தமிழ்நாட்டு மக்களுக்கு எதிரான போக்கைக் கர்நாடக அரசு கைவிட வேண்டும்.” - தொல். திருமாவளவன் | nakkheeran

விழாவில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன், “மது மற்றும் போதை தடுப்பு மாநாட்டையொட்டி தமிழகம், புதுவையில் மகளிர் மது ஒழிப்பு குழு ஒன்றை ஒன்றியம் தோறும் கட்டமைக்க திட்டமிட்டுள்ளோம்.மாநாடு தேதி விரைவில் அறிவிக்கப்படும். புதுச்சேரியில் இட ஒதுக்கீட்டு முறை, முறையாக பின்பற்றப்படவில்லை. இதனை நீதிமன்றங்கள் கூறியிருக்கிறது. எனவே முறையாக எஸ்சி, எஸ்டி சமூகத்திற்கான இட ஒதுக்கீடை பின்பற்றப்பட வேண்டும்.

நாடாளுமன்ற பொது தேர்தலுக்கு முன்னர் தொகுதி மறு சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தேவையுள்ளது. இந்த சூழலில் மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதிகளை வரையறுத்தால் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா,கேரளா உட்பட தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் என்று புள்ளி விவரம் கூறுகிறது. மாநிலப் பிரதிநிதித்துவம் மக்கள் தொகை அடிப்படையில் இருக்கக் கூடாது வேறு சில அளவுகளும் தேவைப்படுகிறது என்பதனை தமிழ்நாடு மற்றும் ஆந்திர முதல்வர்கள் சுட்டிக்காட்டி இருக்கிறார்கள். எனவே தொகுதி மறுசீரமைப்பு என்பது மக்கள் தொகை மட்டும் கொண்டதாக இருக்க கூடாது. விசிக யாருக்கு எதிராகவும் செயல்படவில்லை. விசிக குறுகிய கண்ணோட்டத்துடன் ஜாதிரீதியாக செயல்பட்டது இல்லை. 

தங்கியிருந்த வீட்டில் ஐ.டி ரெய்டு... டார்கெட் செய்யப்படுகிறாரா  திருமாவளவன்?! | Is vck thirumavalavan being targeted amid lok sabha  election? - Vikatan


உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் கடவுளை வழிபட்ட பிறகே தீர்ப்பு கொடுக்க முடிந்தது என்று கூறியிருக்கிறார். கடவுள் நம்பிக்கை என்பது வேறு, நீதி பரிபாலனம் என்பது வேறு. பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பது முக்கியமான கடமை. படித்த சட்டம், சாட்சிகளை வாதங்களை பார்க்காமல் சாட்சியங்களை கேட்காமல் கடவுள் என்ன சொல்கிறாரோ? அதுதான் எனக்கு முதன்மை என்ற நிலைபாடு என்பது ஒட்டுமொத்த மக்களையும் மூடர்களாக ஆக்கும் முயற்சி. இது மிகுந்த வேதனையாக உள்ளது வெட்கக்கேடாக உள்ளது. அனைத்து நம்பிக்கைகளையும் தகர்க்க கூடிய ஒன்று இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. நடிகர் விஜய் கட்சி தொடங்கி மாநாடு நடத்த உள்ளார். இந்த மாநாடு வெற்றியடைய மனதார வாழ்த்துக்கள்என்” என்று தெரிவித்தார்.