அதிமுக இல்லாமல் பாஜக் தனித்து போட்டியிட வாய்ப்பே இல்லை- திருமாவளவன்

 
thiruma

பாஜக கூட்டணியை அதிமுக முறித்துக் கொண்டிருப்பது வரவேற்கத்தக்கது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

குறைந்த பட்சம் 10 கேட்ட திருமா; அதிக பட்சம் 2 சொன்ன ஸ்டாலின்


தாத்தா இரட்டைமலை சீனிவாசன் நினைவு நாளான இன்று சென்னை, வேளச்சேரியில் உள்ள தாய்மண் அலுவலகத்தில் அவரது  சிலைக்கு விசிக தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி மலர்மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “பாஜக கூட்டணியை அதிமுக முறித்துக் கொண்டிருப்பது வரவேற்கத்தக்கது. தொடர்ந்து பாஜக உடன் பயணித்தால், அதிமுகவின் வாக்கு வங்கி சரியும், தனித்து போட்டியிட்டால் வாக்கு வங்கி உயரும். அதிமுக இல்லாமல் பாஜக் தனித்து போட்டியிட வாய்ப்பே இல்லை. ஒருவேளை அப்படி செய்தால் பாஜகவுக்கு ஒரு தொகுதியில் கூட டெபாசிட் கிடைக்காது. அதிமுகவின் தோளில் ஏறி சவாரி செய்ய வேண்டும் என்பது பாஜகவின் கட்டாயம். பாஜகவுடன் அதிமுக கூட்டணியில் இருப்பது அவர்களுக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டுக்கே பாதிப்பு. பாஜக இல்லாமல் அதிமுக தேர்தலை சந்திக்க வேண்டும். . சமூகநீதி என்பது விளிம்புநிலை மக்களை அதிகார வலிமை உள்ளவர்களாக  மேம்படுத்துவதற்கான கோட்பாடு. குலத்தொழிலை மறைமுகமாக திணிக்கும் திட்டம் தான் விஷ்வகர்மா திட்டம்” என்றார்.

அண்மை காலமாக அண்ணாமலை- அதிமுக தலைவர் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ள நிலையில். சென்னையில் செய்தியாளார்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “அதிமுக கூட்டணியில் தற்போது பாஜக இல்லை .கட்சி முடிவையே நான் சொல்கிறேன். தனித்து நின்றால் நோட்டாவை கூட தாண்ட முடியாதவர் அண்ணாமலை. கூட்டணி தர்மம் குறித்து பேசுவதை அதிமுக தொண்டர்கள் சகித்து கொள்ளமாட்டார்கள். பல முறை எச்சரித்தும் அலட்சியப்படுத்துகிறார் அண்ணாமலை. அண்ணாமலைக்கு தகுதிக்கு மீறிய பதவி கொடுக்கப்பட்டுள்ளது” எனக் காட்டமாக தெரிவித்தார்.