கோயில் திருவிழாவில் சாதி பாகுபாடு- நாளை மறுநாள் விசிக ஆர்ப்பாட்டம்

 
thiruma

சேலம் தீவட்டிப்பட்டி வன்முறையை கண்டித்து நாளை மறுநாள் விசிக ஆர்ப்பாட்டம் நடைபெற இருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.

கோயில் திருவிழாவில் சாதி பாகுபாடு : வெடித்த கலவரம்... வன்முறையில் கடைகள் சேதம்!

இதுதொடர்பாக திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சேலம் - தீவட்டிப்பட்டி சாதிய வன்முறை வெறியாட்டத்தைக் கண்டித்தும் மாரியம்மன் திருவிழாவில் ஆதி திராவிட மக்களுக்கான வழிபாட்டுரிமையை வலியுறுத்தியும் மே-08 அன்று சேலத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான து. ரவிக்குமார் பங்கேற்று கண்டன உரை ஆற்றுகிறார். இந்த ஆர்ப்பாட்டம் வெற்றிகரமாக அமைந்திட அதற்கான ஒருங்கிணைப்புப் பணிகளை 
கட்சியின் துணை பொதுச் செயலாளர் வன்னிஅரசு, தலைமை நிலைய செயலாளர்  தகடூர் தமிழ்ச்செல்வன்  மற்றும் மேனாள் மண்டல அமைப்புச்செயலாளர் இரா. கிட்டு ஆகியோர் மேற்கொள்கின்றனர். 


இந்த ஆர்ப்பாட்டம் வெற்றிகரமாக அமைய சேலம் வடக்கு மாவட்ட செயலாளர் தெய்வானை உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து நிலை  பொறுப்பாளர்களும் முழுமையான ஒத்துழைப்பை நல்கிட வேண்டுகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.