“மக்களுக்கு வீடு கிடைக்கவில்லை... ரொம்ப வேதனை”- திருமாவளவன்

 
திருமாவளவன் மக்களவை

பிரதமரின் வீடு கட்டும் திட்டம் முழுமையாக நிறைவடையவில்லை என விசிக எம்பி திருமாவளவன் கூறியுள்ளார்.

2024 தேர்தலுக்கான நாடக அரசியல்தான் மகளிர் இடஒதுக்கீடு மசோதா” - மக்களவையில்  திருமாவளவன் விமர்சனம் | The Women's Reservation Bill is theatric politics  of parliamentary ...

நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் உரையாற்றிய விசிக எம்பி திருமாவளவன், “மூன்று கோடி வீடுகளை புதிதாக கட்டப் போவதாகவும் பெருமை பொங்கக் கூறியிருக்கிறார் குடியரசுத் தலைவர். கடந்த கூட்டத்தொடரின் போது குடியரசுத் தலைவர் அறிவித்த பல அறிவிப்புகளை இந்த கூட்டத்திலும் அறிவித்து இருக்கிறார். அதிலே ஒன்றுதான் இந்த வீடு கட்டும் திட்டம். பிரதமரின் வீடு கட்டும் திட்டம் கடந்த முறை 54,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து அதில் 32,400 கோடி மட்டுமே செலவழித்து இருக்கிறது அரசு. 

சரிபாதியாக செலவை குறைத்து 22,100 கோடி ரூபாய் செலவிடவில்லை. இதனால் பிரதமரின் இந்த வீடு கட்டும் திட்டம் முழுமையாக நிறைவடையவில்லை. ஆங்காங்கே தொடங்கிய பணிகள் அப்படியே கிடக்கின்றன. ஒதுக்கிய நிதியும் விரயம் ஆகிறது. மக்களுக்கு வீடும் கிடைக்கவில்லை. இலக்கும் எட்டப்படவில்லை என்பது எவ்வளவு வேதனைக்குரியது என்பதை தயவு கூர்ந்து எண்ணிப் பார்க்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். 25 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டிருப்பதாக சிலாகித்து பேசி இருக்கிறார் குடியரசுத் தலைவர். ஆனால், இன்னும் கோடான கோடி மக்கள் வறுமையிலே உழன்றுக் கொண்டிருக்கிறார்கள். விலைவாசி உயர்வால் அல்லல் பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது குடியரசுத் தலைவரின் பார்வைக்கு வரவில்லையோ என்கிற வேதனை மிஞ்சுகிறது” என பேசினார்.