திட்டக்குடி கள்ளநோட்டு வழக்கு - விசிக பிரமுகர் கைது

 
vck vck

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே கள்ளநோட்டு வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுளார். 

கடலூரில் கள்ள நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி திட்டக்குடி அருகே பண்ணை வீட்டில் 
நடத்திய சோதனையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி பொருளாளருக்கு சொந்தமான இடத்தில் கள்ள நோட்டு கும்பல் கைது செய்யப்பட்டது. இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த விசிக பிரமுகர் செல்வம் என்பவர் தலைமறைவானார். 
 
இந்த நிலையில், கள்ளநோட்டு வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுளார். கர்நாடகாவில் பதுங்கி இருந்த முக்கிய குற்றவாளியான செல்வம் என்பவரை தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அடிதடி வழக்கு தொடர்பாக கைது செய்ய சென்ற போது, செல்வம் தனது கூட்டாளிகளுடன் கள்ளநோட்டு தயாரித்தது தெரிய வந்தது.