தி.மு.க. கூட்டணிக்கு வருவது போல் காட்டுவது பா.ம.க.வின் ராஜதந்திரம் - திருமாவளவன்

 
thiruma

தி.மு.க. கூட்டணிக்கு பா.ம.க. வருவது போல் காட்டுவது அந்த கட்சியின் ராஜதந்திரம் எனவும், தேர்தல் நேரங்களில் இப்படித்தான் முயற்சி செய்வார்கள் எனவும்

திமுக கூட்டணியில் அங்கம் வகித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாமக அங்கம் வகித்துள்ள கூட்டணியில் விசிக இருக்காது என கூறினார். இந்த நிலையில், பாமக திமுக கூட்டணியில் சேரவுள்ளதாக தகவல்கள் வெளியானதின் எதிரொலியாகவே திருமாவளான் கூறியதாக பரவலாக பேசப்பட்டது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கூறியதாவது:- தமிழ்நாட்டில் பாஜனதா அ.தி.மு.க.வின் முதுகில் ஏறி சவாரி செய்ய பார்க்கிறது. பா.ஜனதா கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. வெளிவர வேண்டும். என்னை பொறுத்தவரை தி.மு.க. தலைமையில் தேசிய அளவில் பா.ஜனதாவுக்கு எதிரான வலுவான ஒரு கூட்டணி அமைய வேண்டும். அதற்கான முயற்சியை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னெடுக்க வேண்டும். 

Thiruma

விடுதலை சிறுத்தைகளை பொறுத்தவரை ஒருபோதும் பா.ஜனதா- அ.தி.மு.க. கூட்டணியில் சேராது. தி.மு.க. கூட்டணிக்கு பா.ம.க. வருவது போல் காட்டுவது அந்த கட்சியின் ராஜதந்திரம். தேர்தல் நேரங்களில் இப்படித்தான் முயற்சி செய்வார்கள். கூட்டணியை விட்டு வெளியே நிற்பது போல் காட்டுவார்கள். இது கூட்டணி கட்சியை மிரட்டுவது. அந்த ராஜதந்திரங்களை பல தேர்தல்களில் பா.ம.க. எடுத்ததை பல கட்சிகளும் பார்த்துவிட்டன. இனி அது எடுபட போவதில்லை. இவ்வாறு கூறினார்.