நடிகர் விஜய் புதிய கட்சி தொடங்கியதை வரவேற்கிறோம் - திருமாவளவன்!

 
thiruma

நடிகர் விஜய் கட்சியின் பெயரை அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். 

சென்னையில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:  விரைவில் விசிக தொகுதி பங்கீடு குறித்து திமுக உடனான பேச்சுவார்த்தையில் பங்கேற்க உள்ளோம்.  2019-ல் இருந்தே பெரிய 10 கட்சிகளுடன் இந்தியா கூட்டணி கட்டுக்கோப்பாக பயணித்து வருகிறது. உரிய முறைப்படி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு சுமூகமான முறையில் இந்தியா கூட்டணியின் தொகுதி பங்கீடு நடைபெறும். பொதுமக்களிடம் திமுக தலைமையிலான கூட்டணிக்கே நன்மதிப்பு பெற்றுள்ளது என கூறினார். 

விஜய் தொடங்கியுள்ள புதிய கட்சி குறித்த கேள்விக்கு பதலளித்த திருமாவளவன், யாரும் எந்த நேரத்திலும் அரசியலுக்கு வரலாம். அதுதான் ஜனநாயகம், அந்த வகையில் நடிகர் விஜய் கட்சியின் பெயரை அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. இதனை நாங்கள் வரவேற்கிறோம்  என கூறினார்.