மதசார்பின்மையைப் பாதுகாத்திட பொங்கல் நாளில் உறுதியேற்போம் - திருமா வாழ்த்து

 
thiruma

தமிழ் மக்கள் யாவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகளை திருமாவளவன் தெரிவித்து கொண்டுள்ளார்.

tn

இதுக்குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் , "தை முதல் நாள்- புத்தாண்டு திருநாளில் தமிழ்ப்பெருங்குடி மக்கள் யாவருக்கும் விசிக சார்பில் எமது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.பொங்கல் திருநாள் மட்டுமே தமிழினம் கொண்டாடுகிற மதசார்பற்ற பெருநாளாகும். எந்தவொரு மத அடையாளமோ, மதம் சார்ந்த சடங்குகளோ இல்லாமல் உழைக்கும் மக்களால் கொண்டாடப்படும் இத்திருவிழா நாளில், மதசார்பின்மையைக் கடைபிடிக்கவும், அதனைக்  காப்பாற்றவும் உறுதியேற்போம்.

Thiruma

தமிழையும் தமிழர் பண்பாட்டையும் சிதைப்பதற்கு நயவஞ்சக சக்திகள் நட்புமுகம் காட்டி, இது நாடா? அகமா? என்றெல்லாம் நாடகமாடுவோரின் அரசியல் நுட்பத்தை உணர்ந்து, அவர்களின் சதிமுயற்சிகளை முறியடிக்கவும் உறுதியேற்போம். புரட்சியாளர் அம்பேத்கர் , தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் போன்ற தலைவர்களின்  பெயர்களையும்;  சமூகநீதி, சமத்துவம் போன்ற சொற்களையும் உச்சரிக்கவே முடியாதென துணிந்து செயல்படுபவர்களின் தீங்கான போக்கை- உள்நோக்கத்தை நாம்  புரிந்துகொள்ள தவறினால், சனாதன சக்திகளின் சதி அரசியலுக்குப் பலியாகும் கேடானநிலைக்குத் தள்ளப்படுவோம்.  இத்தகைய ஒரு அவலநிலை உருவாகாமல் தடுத்து தமிழ்ச்சமூகத்தைப் பாதுகாத்திட தமிழர் திருநாளில் உறுதியேற்போமென சனநாயக சக்திகள் யாவருக்கும் வேண்டுகோள் விடுத்து, எனது மனம் நிறைந்த பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.