மாரிமுத்து மாரடைப்பால் காலமானார் என்பதையறிந்து மிகுந்த வேதனைப்படுகிறேன் - திருமாவளவன் இரங்கல்!

 
thiruma

இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து மறைவுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

நடிகரும் , இயக்குனருமான மாரிமுத்து இன்று காலை 8.30  மணிக்கு மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.  டப்பிங் பேசிக் கொண்டிருந்தபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.  மாரிமுத்து மறைவு திரையுலகினர் மட்டுமல்லாமல் அவரது ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் இவர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது. மாரிமுத்து மறைவிற்கு தலைவர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 


இந்நிலையில், இயக்குநரும் நடிகருமான மாரிமுத்து மறைவுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், மாரடைப்பால் காலமானார் இயக்குநர் மாரிமுத்து என்பதையறிந்து மிகுந்த வேதனைப்படுகிறேன்.  அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு விசிக சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.