சென்னையில் வருகிற 02ம் தேதி விசிக தேர்தல் பணி கலந்தாய்வு கூட்டம் - திருமாவளவன் அறிவிப்பு!

 
thiruma

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் பணி கலந்தாய்வு கூட்டம் வருகிற 02ம் தேதி சென்னையில் நடைபெறும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். 

இது தொடர்பாக திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் பணி கலந்தாய்வுக் கூட்டம் தலைவர் எழுச்சித்தமிழர் அவர்களின் தலைமையில் வரும் 2.9.23 சனிக்கிழமை அன்று சென்னையில் நடைபெறுகிறது. மதியம் 12.30 மணி அளவில், கோயம்பேடு அருகில் நூறடி சாலையில் உள்ள ஹோட்டல் விஜயா பார்க்கில் நடைபெறும். 

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர்,வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 15  மாவட்டங்களைச் சார்ந்த மாவட்டச் செயலாளர்கள், மண்டலப் பொறுப்பாளர்கள் மற்றும் வடமண்டல தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும். அழைப்பு உள்ளவர்கள் மட்டும் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.