தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியாகிறது விசிக

 
தமிழ்நாட்டில் ஒரு குரல், புதுடெல்லியில் ஒரு குரல் என்பதே அதிமுகவின் நிலைப்பாடு- தொல்.திருமா

தேர்தல் ஆணையம்  ‘Election Symbols (Reservation and Allocation) Order 1968’ தேர்தல் சின்னங்கள்(ஒதுக்கீடு) 1968 ஆணையின் மூலம் அரசியல் கட்சிகளுக்கு அங்கீகாரம் அளிக்கிறது.  இதன்படி அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி என்ற அந்தஸ்தை பெற கீழ்கண்ட நிபந்தனைகளில் ஏதாவது ஒன்றை பூர்த்தி செய்ய வேண்டும்.

பானை சின்னம் கேட்டு விசிக தேர்தல் ஆணையத்தில் மேல்முறையீடு

மாநில சட்டப் பேரவை தேர்தலில் பதிவாகிய வாக்குகளில் 6 சதவிகிதம் வாக்குகள் பெற்றிருக்கவேண்டும். அத்துடன் அந்தத் தேர்தலில் 2 இடங்களில் வெற்றிப் பெற்றிருக்கவேண்டும்.  அதேபோல அம்மாநிலத்தில் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் பதிவாகிய வாக்குகளில் 6 சதவிகிதம் வாக்குகள் பெற்றிருக்கவேண்டும். அத்துடன் அந்தத் தேர்தலில் 1 நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றிப் பெற்றிருக்கவேண்டும்.  மாநில சட்டப்பேரவை தேர்தலில் மொத்த தொகுதிகளில் 3 சதவீத இடங்களில் வெற்றி பெற வேண்டும். 

தமிழகத்தைப் பொருத்தவரை 234 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இதில் 3 சதவீதம், அதாவது 8 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலில், மாநிலத்தில் உள்ள எம்.பி. தொகுதிகளில் ஒவ்வொரு 25 இடத்திலும் ஒரு இடத்தில் வெல்ல வேண்டும். அதன்படி, தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதியில் 2 தொகுதிகளில் வெல்ல  வேண்டும். மாநிலத்தில் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தல் அல்லது சட்டப் பேரவை தேர்தலில் 8 சதவீத வாக்குகளைப் பெற வேண்டும்.

பானை சின்னம்.. தேர்தல் ஆணையத்திற்கு அதிரடி ஆர்டர் போட்ட டெல்லி ஐகோர்ட்!  இன்றே முடிவெடுக்க உத்தரவு! | VCK knocks delhi high court to allot Pot  symbol in lok sabha ...

இந்த நிபந்தனைகளில் நாடாளுமன்றத் தேர்தலில், மாநிலத்தில் உள்ள எம்.பி. தொகுதிகளில் ஒவ்வொரு 25 இடத்திலும் ஒரு இடத்தில் வெல்ல வேண்டும். அதன்படி, தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதியில் 2 தொகுதிகளில்  வெல்ல வெண்டும் என்ற விதியை பூர்த்தி செய்யும் வகையில் விழுப்புரம் மற்றும் சிதம்பரம் தொகுதியில் தனிச் சின்னத்தில் போட்டியிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதன் காரணமாக விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு விரைவில் அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி இந்த அந்தஸ்து கிடைக்கும்