‘விசிக விருதுகள்’- அம்பேத்கர் சுடர் விருது பெரும் பிரகாஷ்ராஜ்க்கு அழைப்பு

 
விருது

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழகம் மற்றும் இந்திய அளவில் ஆண்டுதோறும் பல்வேறு தளங்களில் சாதனைகள் படைத்த சான்றோருக்கு விருதுகள் வழங்கி சிறப்பிப்பது வழக்கம்.

Image

அதன்படி, சமூகம், அரசியல், பண்பாடு, கலை-இலக்கியம் போன்ற தளங்களில் சீரிய முறையில் தொண்டாற்றும் சிறப்புமிக்க தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு ஆளுமை வாய்ந்த சான்றோருக்கு “அம்பேத்கர் சுடர், பெரியார் ஒளி, காமராசர் கதிர், அயோத்திதாசர் ஆதவன், காயிதேமில்லத் பிறை மற்றும் செம்மொழி ஞாயிறு” ஆகிய விருதுகள் 2007 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டுவருகிறது. 2022 ஆம் ஆண்டு முதல் கூடுதலாக ‘மார்க்ஸ் மாமணி’ விருதும் வழங்கப்பட்டுவருகிறது.

Image

அந்தவரிசையில் 2024 ஆம் ஆண்டுக்கான விசிக-விருதுகள் பெறும் சான்றோரின் பட்டியலை வெளியிடுவதில் பெருமைப்படுகிறோம். இந்த ஆண்டுக்கான "அம்பேத்கர் சுடர்" விருதினை திரைப்படக் கலைஞரும் மதச்சார்பின்மைக்காக சமரசமில்லாமல் போராடி வருபவருமான பிரகாஷ்ராஜுக்கு வழங்கப்பட உள்ளது. விசிக விருதுகள் வழங்கும் விழா 25.05.2024 அன்று சென்னையில் நடைபெற உள்ள நிலையில், அதற்கான அழைப்பிதழ் பிரகாஷ்ராஜியிடம் வழங்கப்பட்டது.


இதுகுறித்து விசிக எம்பி ரவிக்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், “தலைவர் எழுச்சித் தமிழர் திருமாவளவன் அவர்களின் வழிகாட்டுதலின்படி திரு 
பிரகாஷ் ராஜ் அவர்களை சென்னையில் இன்று சந்தித்து விருதுகள் வழங்கும் விழாவுக்கான அழைப்பிதழை அளித்தோம். தோழர்கள் வன்னி அரசு, எஸ்.எஸ்.பாலாஜி, பாலசிங்கம், தமிழேந்தி, ராஜேந்திரன், ஜெஃப்ரி உள்ளிட்டோர் உடனிருந்தனர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களது whatsapp சேனலை Follow செய்யுங்கள்:

https://whatsapp.com/channel/0029VaDmE2aGehELVeirsJ2r