சென்னையின் பல்வேறு பகுதிகளில் இரவுமுதல் பரவலாக மழை!

 
rain

சென்னையின் பல்வேறு பகுதிகளில் இரவுமுதல் பரவலாக மழை பெய்து வந்ததால் குளிர்ச்சியான வானிலை நிலவுகிறது.

rain

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், இராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

rain

இந்நிலையில் திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், ஆயிரம் விளக்கு, பாரிமுனை, சைதாப்பேட்டை, தியாகராய நகர், அடையாறு, கோடம்பாக்கம், ஆலந்தூர் உள்ளிட்ட சென்னையின் பல்வேறு இடங்களில் இரவுமுதல் மிதமான மழை பெய்து வருகிறது.