“காவல்துறைக்கு கட்டுப்பட்டு நல்ல பிள்ளையா வாழ்ந்துட்டு வரேன்.. கோவை பக்கம் போயே 13 வருஷம் ஆகுது”- வரிச்சூர் செல்வம்

கோவையில் பயங்கர ஆயுதங்களுடன் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டதால் ரவுடி வரிச்சியூர் செல்வத்தை சுட்டுப்பிடிக்க போலீசார் உத்தரவு எனத் தகவல் பரவிய நிலையில், “காவல்துறைக்கு கட்டுப்பட்டு நல்ல பிள்ளையா வாழ்ந்துட்டு வரேன்.. கோவை பக்கம் போயே 13 வருஷம் ஆகுது” என வரிச்சூர் செல்வம் பேட்டியளித்துள்ளார்.
மதுரையை சேர்ந்த பிரபல தாதா வரிச்சூர் செல்வம். இவர் இதுவரை 150 திருமணம் செய்துள்ளாடாக தெரிகிறது. திருச்சி ஜெயிலில் இருந்துவிட்டு, பின்னர் எந்த தவறும் செய்யமாட்டேன் என காவல்துறையிடம் எழுதி கொடுத்துவிட்டு வந்த இவர், தனது கூட்டாளி செந்திலை கொலை செய்தார். ஆள்கடத்தல், கொலை செய்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் ரவுடி வரிச்சூர் செல்வம் மீது உள்ளது. இதையடுத்து ரவுடி வரிச்சூர் செல்வத்தை சுட்டுப் பிடிக்க கோவை மாநகர காவல்துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளது. கோவையில் வரிச்சியூர் செல்வம் மற்றும் அவரது கூட்டாளிகள் பயங்கர ஆயுதங்களுடன் கட்டப்பஞ்சாயத்து என கட்டப்பஞ்சாயத்திற்காக பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் காவலர்கள் சோதனை செய்து வருகின்றனர். தேவைப்பட்டால் காலில் சுட்டு பிடிக்க காவல்துறையினருக்கு உயரதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய வரிச்சூர் செல்வம், “காவல்துறைக்கு கட்டுப்பட்டு நல்ல பிள்ளையாக வாழ்ந்துட்டு வருகிறேன். கோவை பக்கம் சென்று 13 வருஷம் ஆகுது. நான் எங்கே சென்றாலும் காவல்துறைக்கு தெரியப்படுத்திவிடுவேன். பேர, பேத்திகளுடன் சந்தோஷமாக இருக்கிறேன். என் மீது எந்த வழக்கும் இல்லை. எந்த பிரச்சனைகளுக்கும் செல்வதில்லை. தவறு செய்தவர்களை சுட்டு பிடிக்கதான் வேண்டும். திருந்தி ஒழுங்காக இருந்தால் பிரச்சனை இல்லை. எனக்கு எதிரியென யாரும் இல்லை. எனக்கு சொந்தபந்தங்கள் கூடதான் பிரச்சனை, நான் அஜித் படத்துக்கெல்லாம் போகவில்லை. ஓவர் ரவுடிசம் பண்ற படம் எல்லாம் பாக்குறது இல்லை” என்றார்.