"திருப்பி அடித்தால் தாங்க மாட்டீர்கள்"- திமுகவிற்கு வன்னிஅரசு எச்சரிக்கை

 
ஃப்

கூட்டணி விவகாரத்தில் தலைவர் திருமாவளவனின் கருத்துதான் விசிகவின் நிலைப்பாடு என அமைச்சர் வன்னிஅரசு கூறியுள்ளார்.


சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் வன்னிஅரசு, “திமுகவுடன் நட்புணர்வோடு இருக்கிறோம் என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். ஏன் தவெக ஆட்சிக்கு ஆதரவு கொடுத்தோம் என்றும் தெளிவுப்படுத்தியுள்ளார். கூட்டணி விவகாரத்தில் தலைவர் திருமாவளவனின் கருத்துதான் விசிகவின் நிலைப்பாடு. அவரின் பேச்சுக்கு நான் உரை எழுத முடியாது. திமுக எங்களை துரோகம் இழைத்தாக  சொல்கிறார்கள், யார் துரோகம் இழைத்தது? 4 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்த போது அமைச்சரவையில் இடம் கொடுத்திருக்க வேண்டும். இன்று அதற்கான வாய்ப்பு அமைந்ததும் ஆற்றாமையில் துரோகிகள் என்கிறீர்கள். ஆ.ராசா போன்றவர்கள் அவதூறு பரப்பினால் தக்க பதிலடி கொடுப்போம். உங்கள் வேலையை மட்டும் பாருங்கள். எங்களுக்கு ஆலோசனை சொல்ல வேண்டிய அவசியமில்லை. நாங்கள் தமிழ்நாட்டையே வழிநடத்தி கொண்டிருப்பவர்கள். தமிழ்நாட்டின் திசைவழியை தீர்மானிப்பவர்கள் விசிகவினர். திமுகவினர் அவதூறு பரப்புவது ஆற்றாமையின் வெளிப்பாடு. திருப்பி அடித்தான் தாங்க மாட்டீர்கள்” என்றார்.