"தமிழுக்கு அவமானத்தை ஏற்படுத்திய ஆளுநர்"- வன்னி அரசு

 
வன்னி அரசு

தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த மக்களின் உணர்வுக்கு எதிரான செயலை ஆளுநர் அரங்கேற்றியுள்ளதாக அமைச்சர் வன்னியரசு கூறியுள்ளார்.

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் முதலில் வந்தே மாதரம், 2ஆவதாக தேசிய கீதம், 3ஆவதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்து 3ஆவதாக பாடப்படும் என துணைவேந்தர் அறிவித்ததற்கு எழுந்த கடும் எதிர்ப்பையும் மீறி பட்டமளிப்பு விழா வந்தே மாதரம் பாடலுடன் தொடங்கியது. தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் பட்டமளிப்பு விழாவை புறக்கணித்தார்.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அமைச்சர் வன்னிஅரசு,  “தமிழர், தமிழ்நாடு விரோத நடவடிக்கையில் மத்திய பாஜக அரசும், ஆளுநர் அர்லேகரும் ஈடுபடுகிறார்கள். சொல் அல்ல செயல் என்பதன் அடிப்படையில் தான் ஆளுநரின் விழாவை அமைச்சர், எம்எல்ஏக்கள் புறக்கணித்துள்ளனர். தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாவதாக பாடியதன் மூலம் தமிழுக்கு அவமானத்தை ஏற்படுத்தியுள்ளார் ஆளுநர். தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த மக்களின் உணர்வுக்கு எதிரான செயலை ஆளுநர் அரங்கேற்றியுள்ளார். பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதன் மூலம் தமிழக அரசின் கண்டிப்பை வெளிப்படுத்துகிறோம்” எனக் கூறியுள்ளார்.