ஆடு, மாடு மாநாட்டின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ்- வன்னி அரசு

 
ச் ச்

ஆடு, மாடு மாநாட்டை #RSS பின்னணியில் சீமான் நடத்தியுள்ளார் என விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப்பொதுச்செயலாளர் வன்னி அரசு குற்றம்சாட்டியுள்ளார்.

வன்னி அரசுவின் ட்விட்டர் பக்கம் முடக்கம் | Vanni arasu twitter page is  disabled - kamadenu tamil

இதுதொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப்பொதுச்செயலாளர் வன்னி அரசு எக்ஸ் தள பக்கத்தில், “#எச்சரிக்கை இன்று அழகு முத்துக்கோன் குருபூஜை விழா நடைபெறுகிறது. இதையொட்டி நேற்றே ஆடு மாடுகளுக்கான மாநாட்டை மதுரையில் நடத்தியிருக்கிறார் #நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள். ஆரியக்கோட்பாடான குலக்கல்வித்திட்டத்தை ஊக்கப்படுத்தவே இந்த மாநாட்டை #RSS பின்னணியில் நடத்தியுள்ளார்.

பார்ப்பனரல்லாத சமூகம் படிக்ககூடாது என்பது தான் சனாதனம். அந்த சனாதனத்தை நிலை நிறுத்த பார்ப்பனக்கும்பலின் பின்னணியோடு இப்படியான மாநாடுகளை நடத்துகிறார் சீமான். மாடுகளை பாதுகாக்கும் #RSS கோசாலைகளும் சீமானின் மாநாடுகளும் ஒரே நோக்கத்தில் நடத்தப்படுகின்றன. பனை ஏறி கள்ளு குடிக்க வலியுறுத்துவதும் மாடுகளை மேய்க்கச்சொல்லுவதும் குடி பெருமையின் உச்சம். சாதி வெறியின் எச்சம். அது சரி, மாடுகளை மேய்க்கவும் பனை ஏறவும் பார்ப்பனர்களை வலியுறுத்துவாரா? அல்லது காலம் காலமாய் தொழில் செய்வோரே செய்யணுமா?” எனக் கேள்வி எழுபியுள்ளார்.