"இதற்கு பெயர் தான் Elite அரசியல்"- விஜய்யை விமர்சித்த வன்னி அரசு
Dec 30, 2024, 14:10 IST1735548017458
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், திமுக ஆட்சியில் பெண்களுக்கான பாதுகாப்பின்மை குறித்து, மாண்புமிகு ஆளுநர் அவர்களைச் சந்தித்துப் பேசியிருப்பதற்கு விசிக துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக விசிக துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு தனது எக்ஸ் தளத்தில், “ஆளுனரை சந்தித்து முறையிடுவதை சாட்டை புகழ் அண்ணாமலை மற்றும் பாஜக ஆதரவாளர்களை வைத்து தான் தில்லி பாஜக அரசியல் செய்வது வழக்கம்.
இப்போது தவெக தலைவர் நடிகர் திரு. விஜய் அவர்களை வைத்து அரசியல் செய்கிறது.
ஆளுனர் ரவி அவர்களை திரு.விஜய் 15 நிமிடம் சந்தித்தார். ஊடகவியலாளர்களை கண்டு கையசைத்தார்.ஆனால், ஊடகத்தினருக்கு பேட்டி கொடுக்காமலே சென்றுவிட்டார். இதற்கு பெயர் தான்
Elite அரசியல்” எனக் குறிப்பிட்டுள்ளார்.