"உண்மையை சொன்னால் தமிழ்நாடு அதிர்ந்துவிடும்"- வனிதா விஜயகுமார் பரபரப்பு

 
வனிதா விஜயகுமார் பேட்டி

என்னுடைய முதல் காதலைப்‌ பற்றி இப்போது சொன்னால் தமிழ்நாடே அதிர்ந்து விடும் என நடிகை வனிதா விஜயகுமார் கூறியுள்ளார்.

Vanitha Vijayakumar open reply for her next marriage question


யூடியூப் தளம் ஒன்றில் தனது முதல் காதல் குறித்து பேசிய வனிதா விஜயகுமார், “என்னுடைய முதல் காதல் பற்றி பேச வேண்டும் என்றால், என்னால் இப்போது எதையும் வெளிப்படையாக பேச முடியாது. என்னை முதன் முதலாக காதலித்தது யார்? அல்லது நான் யாரை முதன் முதலில் காதலித்தேன் என்பதை என்னால் வெளியே சொல்லவே முடியாது. அப்படி நான் அந்த உண்மையை சொன்னால் ஒட்டுமொத்த தமிழ்நாடும் அதிர்ந்துவிடும். அதனால் அதை சொல்லாமல் நான் மௌனமாக இருப்பதே நல்லது. எனது முதல் காதலை சொல்லாமலே பல வருடங்களை நான் கடந்து வந்துட்டேன். என்னுடைய நினைவுகள் எப்போதும் எனக்குள் மட்டும் தான் இருக்கும். முதல் காதல் ரகசியம் எனக்கும் சம்பந்தப்பட்ட அந்த நபர் என 2 பேருக்குமே மிக நன்றாக தெரியும்” என்றார்.