"விஜய் முகத்தை கிண்டல் பண்ணியிருக்காங்க" - வனிதா விஜயகுமார்

 
ச் ச்

இன்றைக்கு விஜய் சேதுபதி மகன் சூர்யா சேதுபதி Troll செய்யப்படுவது, தளபதி மாதிரி ஸ்டாராக மாறுவதற்கான அறிகுறிதான் என நடிகை வனிதா விஜயகுமார் கூறியுள்ளார்.

‘மிஸஸ் அண்ட் மிஸ்டர்’ படத்தை இயக்கி, அதில் வனிதா விஜயகுமார் கதாநாயகியாக நடித்துள்ளார். அவர் மகள் ஜோவிகா படத்தின் தயாரிப்பாளர். சென்னையில் நேற்று சிறப்பு காட்சி முடிந்தபின் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை வனிதா விஜயகுமார், “தமிழ் நடிகர்களுக்கு பெரிய படங்களில் வாய்ப்பு கிடைப்பதில்லை. பக்கத்துக்கு மாநில நடிகர்களைதான் பெரிய படத்திற்கு கூப்பிடுகிறார்கள். தனுஷ், அஜித் மற்றும் சூர்யா போன்ற நடிகர்கள் எல்லாம் ஏன் எங்களை நடிக்க கூப்பிட மாட்டிங்குறாங்க. இன்றைக்கு விஜய் சேதுபதி மகன் சூர்யா சேதுபதி Troll செய்யப்படுவது, தளபதி மாதிரி ஸ்டாராக மாறுவதற்கான அறிகுறிதான். ‘கோயம்புத்தூர் மாப்பிள்ளை' பட நேரத்துல விஜயோட முகத்தை அப்படி கிண்டல் பண்ணியிருக்காங்க. நானே நேர்ல பார்த்துருக்கேன். ஆனால் அத்தனை விமர்சனங்களையும் தாண்டி இன்றைக்கு ஜெயிச்சுருக்காரு. சூர்யா சேதுபதிக்கு நான் சொல்றது என்னென்னா, போராடி அவங்க அப்பாவைவிட பெரிய ஹீரோவாக வரணும்” என்றார்.