முதன்முறையாக செங்கோட்டையில் பாடப்பட்ட வந்தே மாதரம்..!

 
1

செங்கோட்டையிலிருந்து நடைபெற்ற நாட்டின் 80-வது சுதந்திர தினக் கொண்டாட்டங்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்கினார்.

இந்திய நாட்டின் 80வது சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்படும் நிலையில், டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடியை ஏற்றினார். அதற்கு முன்பாக வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு நிறைவை கொண்டாடும் விதமாக சுதந்திர தின விழாவில் முதன்முறையாக வந்தே மாதரம் பாடல் பாடப்பட்டது. அதனைத்தொடர்ந்து, தேசியக் கொடி ஏற்றத்திற்கு பின்பு, தேசிய கீதம் பாடப்பட்டது. அதன் பின்னர், தேசியக் கொடியுடன் பறந்த ஹொலிகாப்டர் மூலம் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ச்சியாக, ராணுவ படைகளின் அணிவகுப்பு நடைபெற்றது.