4வது முறையாக மாடு மீது மோதி சேதமடைந்த வந்தே பாரத் ரயில்!

 
train

பெங்களூருவில் இருந்து சென்னை வந்த வந்தே பாரத் வரைவரையில் கண்ணுக்குட்டி மோதி விபத்துக்குள்ளானது ரயிலின் முன்பக்கம் சிறிதளவு சேதம் ஏற்பட்டது.

வந்தே பாரத் ரயில் மீண்டும் மாடு மீது மோதியது: பயணத்தை தொடங்கிய முதல்  வாரத்திலேயே 2வது விபத்து

பெங்களூரில் இருந்து சென்னை வரை இயக்கப்பட்ட வந்தே பாரத் ரயில் ஆனது நேற்று இரவு வந்து கொண்டிருக்கும்போது அரக்கோணம் ரயில் நிலையத்தில் கன்னுக்குட்டி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின் காரணமாக ரயிலின் முன்பகுதியானது சிறிது அளவு சேதம் அடைந்துள்ளது. இந்த ரயிலை கடந்த 11ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி பெங்களூரில் இருந்து துவக்கி வைத்தார் வந்தே பாரத் ரயில் துவங்கப்பட்டு முதலிலிருந்து நான்காவது முறையாக விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.

கமதாபாத் மற்றும் புதுடில்லி - இமாச்சலில் உள்ள உனா பகுதிக்கு என 4 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை - மசூர் இடையே இயங்கவுள்ள 5வது வந்தே பாரத் ரயிலின் இயக்கத்தை கடந்த 11  ஆம் தேதி  பெங்களூருவில் பிரதமர் மோடி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்த வந்தே பாரத் ரயில் 504 கி. மீ தொலைவை 6½ மணி நேரத்தில் கடக்கும். சென்னை மசூர் இடையே காட்பாடி மற்றும் பெங்களூரு ஆகிய இரு ரயில் நிலையங்களில் மட்டுமே இந்த ரயிலானது நிற்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 16 பெட்டிகளை கொண்ட இந்த வந்தே பாரத் ரயிலில் தானியங்கி கதவுகள், ஜி.பி.எஸ் உடனான ஆடியோ, விஷுவல் தகவல் மையம், ஹாட்-ஸ்பாட் ஃவைஃபை, சொகுசு இருக்கைகள், ஒவ்வொரு பெட்டிக்கும் தனித்தனி பேண்ட்ரி வசதி என பல்வேறு நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.