வண்டலூர் உயிரியல் பூங்கா நாளை திறந்திருக்கும்!!

 
vandalur zoo

வண்டலூர் உயிரியல் பூங்கா நாளை திறந்திருக்கும்  என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

t

தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப் பெரிய உயிரியல் பூங்காவாக இருந்து வரும் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, இந்தியாவின் பழமையான பூங்காவாகவும் இருந்து வருகிறது.  ஆண்டுதோறும்  20 லட்சம் பார்வையாளர்களுக்கும் மேல் வண்டலூர் பூங்காவிற்கு வருகை தருகின்றனர்.  அதிலும், ஞாயிறு, கோடை விடுமுறை போன்ற விடுமுறை நாட்களில் வண்டலூர் பூங்காவிற்கு ஏராளமான பார்வையாளர்கள் வருவது வழக்கம்.

tt

இந்நிலையில்  பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறையை முன்னிட்டு வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா நாளை திறந்திருக்கும் என பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.