பவதாரிணி மறைவு - வானதி சீனிவாசன் , வேல்முருகன் இரங்கல்!!

 
tn

இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரிணி மறைவுக்கு வேல்முருகன் , வானதி சீனிவாசன் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

வானதி சீனிவாசன் பாஜக எம்எல்ஏ 

Vanathi seenivasan

இசைஞானி திரு.இளையராஜா அவர்களின் புதல்வியும் பாடகியுமான பவதாரிணியின்  மறைவு செய்தி கேட்டு மனம் வேதனை கொள்கிறது. அற்புதமான குரலால் அனைவரையும் கவர்ந்தவர். 

பவதாரிணியின் இழப்பு என்பது ஈடு செய்ய முடியாத ஒன்று. அவரின் ஆன்மா இறைவனின் நிழலில் இளைப்பாற இறைவனை பிரார்த்திக்கிறேன். ஈடுசெய்ய முடியாத இழப்பைத் தாங்கும் மன வலிமையை அவரது குடும்பத்தாருக்கும் இசைஞானி திரு.இளையராஜாவிற்கும் தர இறைவனை வேண்டுகிறேன்.

எம்எல்ஏ வேல்முருகன் 

velmurugan

இசைஞானி திரு.இளையராஜா. அவர்களின் மகளும் பின்னணிப் பாடகியும் இசையமைப்பாளருமான திருமதி.பவதாரணி.அவர்கள் மரணமடைந்தார் என்கின்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

அவரை இழந்து வாடும் திரு.இளையராஜா. உள்ளிட்ட அவரது குடும்பத்தினர்களுக்கும்  உறவினர்களுக்கும் இசை ரசிகர்களுக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.