நீதிமன்ற வளாகத்தில் கொலை- சட்டம், ஒழுங்கு கேள்விக்குறி?: வானதி சீனிவாசன்

 
Vanathi seenivasan

கோவை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்காக ஆஜராக வந்த 3 பேரை 9 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதற்கு தமிழக பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். 

gang beating two people who came out after appearing in court

கோவையில், பெண் வன்கொடுமை வழக்கு தொடர்பாக நீதிமன்ற வழக்கு விசாரணை ஒன்றில் பங்கெடுத்துவிட்டு வெளியில் வந்த குற்றவாளிகள் மூன்று பேரை, இரு சக்கர வாகனங்களில் ஒன்பது பேர் கொண்ட கும்பல் துரத்திச் சென்று சரமாரியாக வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், “கோவையில் வன்கொடுமை வழக்கில் ஆஜராக வந்த குற்றவாளிகளை நீதிமன்ற வளாகத்திலேயே வைத்து ஒன்பது பேர் கொண்ட குழு அரிவாளால் கொடூரமாக தாக்கியிருக்கும் சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. கோவையில் பெருகிவரும் வன்முறை சம்பவங்கள், சட்டம் ஒழுங்கையும், காவல்துறையில் செயல்பாடுகளையும் கேள்விக்குறியாக்குகிறது. 


பொது மக்களுக்கு அச்சுறுத்தலாகிவரும் இது போன்ற குற்ற சம்பவங்கள் இனிமேலும் நிகழாத வண்ணம், தமிழக அரசும், காவல் துறையும் துரிதமாக செயல்பட்டு சட்டம் ஒழுங்கை சீர் செய்ய வேண்டும். காவல் துறை மீதான மக்களின் நம்பிக்கை காக்கப்பட வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.