#BREAKING பாஜகவின் தேசிய மகளிரணி தலைவர் பொறுப்பில் இருந்து வானதி சீனிவாசன் விடுவிப்பு

 
ச்

பாஜகவின் தேசிய மகளிரணி தலைவர் பொறுப்பில் இருந்து வானதி சீனிவாசன் விடுவிக்கப்பட்டுள்ளார்.

பாஜகவின் தேசிய மகளிரணி தலைவர் பொறுப்பில் இருந்து வானதி சீனிவாசன் விடுவிக்கப்பட்டுள்ளார். பாஜகவின் தேசிய மகளிரணி தலைவராக சத்தீஸ்கரை சேர்ந்த ரூப் குமாரி செளத்ரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாட்டை சேர்ந்த வானதி சீனிவாசன் 6 ஆண்டுகளாக தேசிய மகளிரணி தலைவர் பொறுப்பில் இருந்தார் என்பது குறிப்பிடதக்கது.

கோயம்புத்தூர் மாவட்டம், தொண்டாமுத்தூர் அருகே உள்ள உளியம்பாளையம் கிராமத்தில் மரபாக வேளாண்மை செய்யும் கொங்கு வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த வானதி சீனிவாசன் ஓர் சமூக ஆர்வலர், வழக்கறிஞராவார். இவர் தாமரை சக்தி, புதிய இந்தியா மன்றம், கோவை மக்கள் சேவை மையம் போன்ற சமூக சேவை நிறுவனங்களை நிறுவியுள்ளார்.