கேப்டன் விஜயகாந்திற்கு பத்மபூஷன் விருது வழங்கியதில் மிக்க மகிழ்ச்சி - வானதி சீனிவாசன்

 
vanathi--srinivas-3

தமிழ்நாட்டு மக்களின் கேப்டனாக திகழும் விஜயகாந்த் அவர்களுக்கு மத்திய அரசு பத்மபூஷன் விருது வழங்கியதில் மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது என பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பாக வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள பதிவில், கேப்டன் திரு.விஜயகாந்த்  அவர்களுக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது அவரது புகழுக்கு மேலும் ஒரு சிறப்பு சேர்த்திருக்கிறது.  தன்னலம் பாராமல் பலருக்கு உதவி, பசியோடு வரும் எளியோரை கண்டபோதெல்லாம் வாடி அவர்களுக்கு உணவளித்து தானும் மகிழ்ந்து, தமிழ்நாட்டு மக்களின் கேப்டனாக திகழும் திரு.விஜயகாந்த் அவர்களுக்கு மத்திய அரசு இந்த விருது வழங்கியதில் மிக்க மகிழ்ச்சி


கேப்டன் திரு.விஜயகாந்த் அவர்களுக்கு பத்மபூஷன் விருது வழங்கிய பெருமை படுத்தி உள்ள திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு மனமார்ந்த நன்றி என வானதி சீனிவாசன் குறிப்பிட்டுள்ளார்.