கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை ஒழிக்க நடவடிக்கை தேவை- வானதி சீனிவாசன்

 
vanathi srinivasan

கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களை ஒழிக்க மத்திய அமைப்புகளுடன் இணைந்து தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வானதி சீனிவாசன் எம்எல்ஏ கேட்டுக்கொண்டுள்ளார். 

To take on Haasan in Coimbatore South, BJP banks on Vanathi's  development-oriented image | Deccan Herald

தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வருகை தந்த பிஜேபி கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசனுக்கு தூத்துக்குடி மாவட்ட பிஜேபி சார்பில் சிறப்பான வரவேற்பு அளித்தனர். பின்னர் செய்தியாளரிடம் பேசிய அவர், “ தமிழகத்தில் போதைப் பொருட்கள் நடமாட்டம் கஞ்சா என்பது எல்லா மாவட்டங்களிலும்  கல்லூரி, பள்ளி மாணவர்கள் கையில் புழக்கம் அதிகமாக இருக்கக்கூடிய சூழல் இருந்து கொண்டிருக்கிறது.  போதைப் பொருளுக்கு எதிராக அவர்கள் எடுத்துக்கொண்ட  வாக்குறுதி மற்றும் உறுதிமொழி என்பது போதாது. இது மிக மிகக் கடுமையான நடவடிக்கையின் வாயிலாக தான் கட்டுப்படுத்த முடியும் தேவைப்பட்டால் மத்தியில் இருக்கக்கூடிய அமைப்புகளோடு கூட மாநிலத்தினுடைய மாநில முதல்வர் கலந்து பேசி அண்டை மாநிலங்கள் வழியாக வரக்கூடிய இந்த போதைப் பொருளுக்கு தகுந்த முறையில் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை.

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு காவல்துறை செயலிழந்து கொண்டிருக்கிறதா என்ற ஒரு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதேபோல அதிகமான குற்ற வழக்குகள் பதிவாகக்கூடிய ஒரு சூழல் இருக்கிறது. அதுவும் ஒரு காரணம்” எனக் கூறினார்.