பத்திரிகையாளர் சகோதர, சகோதரிகளுக்கு தேசிய பத்திரிகையாளர் தின வாழ்த்துக்கள் - வானதி சீனிவாசன்

 
vanathi--srinivas-3

ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் பத்திரிகை மற்றும் ஊடகங்கள் நாட்டின் மாண்புகளை கட்டிக்காப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது என பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் குறிப்பிட்டுள்ளார். 

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 16ம் தேதி தேசிய பத்திரிகை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தேசிய பத்திரிகை தினத்தையொட்டி தலைவர்கள் பலரும் ஊடக துறையினர் மற்றும் பத்திரிகை துறையினருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் பத்திரிகையாளர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார். 


இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் பத்திரிக்கை மற்றும் ஊடகங்கள் நாட்டின் மாண்புகளைக் கட்டிக்காப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது.   பத்திரிகையாளர்கள் சமூகத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி போன்றவர்கள். அவர்கள் அரசின் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்த்து, மக்களுக்கும் அரசிற்கும் பாலமாக விளங்குகிறார்கள்.  பேரிடர் காலங்களில் அவர்கள் நாட்டிற்கு ஆற்றிய சேவை மகத்தானது. பத்திரிக்கையாளர் சகோதர,சகோதரிகளுக்கு தேசிய பத்திரிகையாளர் தின வாழ்த்துக்கள். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.