இந்த தீபாவளி அனைவரது வாழ்க்கையிலும் ஒற்றுமையின் புதிய சகாப்தத்தை ஏற்படுத்தட்டும் - வானதி சீனிவாசன்

 
vanathi srinivasan

பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் காலையிலேயே எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடைகளை உடுத்தி தீபாவளி பண்டியை கொண்டாடி வருகின்றனர். பட்டாசுகளை வெடித்தும், புத்தாடைகள் உடுத்தியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். இதேபோல் ஒருவருக்கொருவர தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இதேபோல் தலைவர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 


இந்த நிலையில், பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், உங்கள் அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். தீபாவளியில் பரவுகிற புதிய வெளிச்சம்,வளமான தமிழகத்தையும், வலிமையான பாரதத்தையும் ஏற்படுத்தக் கூடிய தீபாவளியாக அமையட்டும்.  இந்த பண்டிகை அனைவருக்கும் அமைதி, முன்னேற்றம் மற்றும் ஒற்றுமையின் புதிய சகாப்தத்தை ஏற்படுத்தட்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.